Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர்..
விஜய்62 படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை வைத்து இருப்பது விஜயும், அஜித்தும் தான். தல, தளபதி மீது கொள்ளை பிரியம் கொண்ட ரசிகர்கள் இங்கு ஏராளம். சத்தமே இல்லாமல் இருப்பவர் அஜித். அவர் எங்கு இருப்பார் என்பது யாருக்குமே தெரியாது. தலக்கு நேர் மாறாக இருப்பவர் தளபதி. சமூகத்தின் சில பிரச்சனைகளுக்கு தானாகவே முன் வந்து கருத்து சொல்பவர். அதை போல, தெறி, பைரவா, மெர்சல் உள்ளிட்ட படங்களும் அதிக சமூக பிரச்சனையையே பேசியது. தற்போது, தனது ஆஸ்தான் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இவர்கள் கூட்டணியில் உருவான கத்தி, துப்பாக்கி ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜயின் அடுத்த படம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அதிலும், குறிப்பாக இயக்குனர் அமீர், கண்ணப்பிரான் என்ற தலைப்பில் ஒரு கதையை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், விஜய் இன்னும் தன் முடிவை தெரிவிக்கவில்லையாம். வித்தியாசமாக உருவாக இருக்கும் இப்படத்தின் கதையில் விஜயை தவிர தன்னால் வேறு யாரையுமே நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை முடித்து கொண்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவலை விஜய் தரப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
