Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay63

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்62 படத்தை தொடர்ந்து தளபதி நடிக்க இருக்கும் பார்ட்-2 இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி விஜய் தனது வெற்றிப்படமான தலைவா இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிப்பார் என்ற புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62 படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாக இருக்கும் இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பை இதுவரை முடிந்து இருக்கிறது. பெயரிடப்படாத இப்படம் எதும் சமூக பிரச்சனையை கையில் எடுத்து பேசும் என கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படம் பாதி முடிந்துட்டு. அப்போ, விஜயின் அடுத்த படம் குறித்து விவாதங்கள் கிளம்பணுமேனு நீங்க நினைச்சா உங்களுக்கான தகவல்கள் தான் இது.

இந்நிலையில், விஜய் நடிப்பில் தலைவா 2 படம் விரைவில் உருவாக இருப்பதாக ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். இதற்கான கதையும் அவர் தயாரித்து இருப்பது தான் இந்த வைரலின் அதீத சுவாரசியம்.

இதுகுறித்து, இயக்குனர் ஏ.எல்.விஜயிடம் சமீபத்திய பேட்டியில், தலைவா2 படம் எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி இதுதான். விஜய் அவர்களுக்கு தெரியும் எப்போது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று. நான் கதையையும் ஏற்கெனவே தயார் செய்து வைத்துவிட்டேன் என்றார்.

இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 9ந் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தமிழகத்திலும் புதுவையிலும் வெளியிடப்படாமல் மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் வெளியிடப்பட்டது. தலைவா படத்தில் விஜயின் போஸ் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னையில் இத்திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் வரை திரையிட மறுத்துவிட்டார்கள். இதை தொடர்ந்து, அப்படத்தில் ‘டைம் டூ லீட்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டது.

அதனால், இப்படம் தமிழகத்தில் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகவில்லை. தலைவா படம் தமிழகம், புதுவையில் 20ந் தேதி திரையிடப்பட்டது. இவ்வேளையில், இப்படம் இரண்டாம் பாகமாக தயாராவதால் படத்திற்கு தற்போதே இப்படத்தின் தகவல்கள் இணையத்தளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top