`துப்பாக்கி’, `கத்தி’, படத்தை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் விஜய்யின் 62-வது படம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்க இருக்கிறது.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’.

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. மேலும் நடிகர் விஜய் அவரது காட்சிகளை நடித்து முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.

`மெர்சல்’ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

அந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகம் இல்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. மாறாக இது ஒரு புதுமையான கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.Vijay-ARMurugadoss

`ஸ்பைடர்’ படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், `ஸ்பைடர்’ ரிலீசுக்கு பிறகு விஜய் படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட இருக்கிறாராம். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.