நடிகர் விஜய் நடித்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் டிரைலர் வெளியானபோதே பரவலராக அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.

mersal

இப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் வெளியாவதற்கு முன்பாகவே டைட்டில் பிரச்னை என சில சிக்கல் வந்தன.

ரிலீஸிற்குப் பிறகு படத்தில் ஜி.எஸ்.டி குறித்தான காட்சிகளை நீக்க வேண்டும் என பி.ஜே.பி யின் ஹெச் ராஜா தெரிவித்தார். விஜய் குறித்த அவர் பேசிய விஷயங்களுக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பின. இவற்றையெல்லாம் கடந்து படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

mersal

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தின் வெற்றி குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வசூலிலும், வரவேற்பிலும் சாதனை படத்தை இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரித்தது.

இந்த நிலையில் ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தளபதியை மெர்சல் படத்தை தொடர்ந்து, தங்கள் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பார் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதனை அந்நிறுவன உரிமையாளர் ஹேமா ருக்மணி அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Dhanush
Dhanush

இந்தப் படத்தை மெர்சலை விட பிரமாண்டமாக எடுக்க தேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனுஷ் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் ஹேமா ருக்மணி கூறியுள்ளார்.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனைநோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை நடித்து வருகிறார் என்பதும் இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.