விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதற்காக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய் யின் திரை வாழ்க்கையில் ஏகப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான காமெடி நடிப்பு நடனம் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனரான வம்சி பைடி பல்லி இயக்கத்தில் தளபதி 66 எனும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்திற்கு மேல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு பல பேட்டிகளில் தளபதி 66 படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அதாவது தனது திரை வாழ்க்கையில் தளபதி 66 திரைப்படம்தான் மிக முக்கியமான படம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார். மேலும் வம்சி பைடி பல்லி விஜய்யிடம் தளபதி 66 படத்தின் கதையை கூறியபோது விஜய் தனது 20 வருட திரைவாழ்க்கையில் இப்படி ஒரு குடும்ப கதையை நான் கேட்டதில்லை என கூறியதாக கூறியுள்ளார்.
படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடிக்கும் எனவும் விஜய்க்கு இந்த கதை சரியாக இருக்கும் இப்படத்தினை வருகிற தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போது உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி 66படத்தின் படப்பிடிப்பை கூடியவிரைவில் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது தளபதி 66 படத்தில் விஜய் மற்றும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் கூடிய விரைவில் படத்தின் கதாநாயகி மற்றும்சக நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார். இப்படத்தில் பெரும்பாலான நடிகர்கள் தெலுங்காக இருந்தாலும் தமிழ் நடிகர்களும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.