இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை முதல் கேரக்டருக்கான படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இரண்டாவது கேரக்டரின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த கேரக்டருக்காக விஜய் 10 கிலோ உடல் எடையை குறைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  நடிகர் விஜய்யை மீண்டும் வம்பிழுத்து ரசிகர்களிடம் சிக்கிகொண்ட ஹெச்.ராஜா.! சும்மா விடுவாங்களா என்ன.!

பொதுவாக விஜய் பெரிய அளவில் கெட்டப்பை மாற்றி நடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படத்தின் இரண்டாவது கெட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது.