fbpx
Connect with us

Cinemapettai

13 ஆண்டுகளுக்கு முன் விஜய்யால் அசிங்கப்பட்ட நெப்போலியன்.. போக்கிரி படத்தின் போது நடந்தது என்ன?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன் விஜய்யால் அசிங்கப்பட்ட நெப்போலியன்.. போக்கிரி படத்தின் போது நடந்தது என்ன?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் தங்க மகனாக விளங்கி வருகிறார். சமீபகாலமாக இவரின் ஒவ்வொரு படமும் எதிர்பாராத அளவு வசூலைக் குவித்து வருகிறது. இன்று சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஜொலிக்கும் விஜய்யின் வசூலுக்கு போக்கிரி படமும் ஒரு விதமான காரணம் தான்.

2007 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப்படம் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த படத்தில் விஜய்யுடன் நடிகர் நெப்போலியன் நடித்திருப்பார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது வரை நெப்போலியன் விஜய்யின் எந்த ஒரு படத்தையும் பார்ப்பதில்லையாம்.

போக்கிரி படப்பிடிப்பின்போது நெப்போலியன் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அவர்களுக்கு விஜய்யை மிகவும் பிடிக்குமாம். வயதில் மூத்தவர் என்பதாலும் நன்றாக பழகக்கூடியவர் என்பதாலும் எதார்த்தமாக தனது உறவினர்களை விஜய்யை கேட்காமலேயே அழைத்துச் சென்று விட்டாராம்.

முதல் முறையாக நெப்போலியன் தனது உறவினர்களுடன் வரும் போது எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் விஜய். ஆனால் தொடர்ந்து அந்த மாதிரி கூட்டம் கூட்டமாக நெப்போலியன் கூட்டிவர விஜய்க்கு செம கடுப்பாகி விட்டதாம்.

அதனால் தனது கேரவன் காவலாளியிடம் நெப்போலியன் வந்தால் அவரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்து விட்டாராம். காவலாளி தடுத்தும் விஜய்யை பார்க்க அவரது கேரவனுக்கு சென்ற போது, உங்களுக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா என கேட்டு விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் என்னை கேட்காமல் இந்த மாதிரி செய்யாதீர்கள் என சங்கடப்படுத்தி விட்டாராம். தனது உறவினர்கள் முன்பு அசிங்கப்பட்ட நெப்போலியன், போக்கிரி படத்திற்கு பிறகு விஜய்யின் எந்த படங்களையும் 13 ஆண்டுகளாக பார்ப்பதே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் விஜய்யுடன் நடந்த இந்த கசப்பான நிகழ்வை மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் உண்மையிலேயே அப்படி நடந்து கொண்டாரா, அல்லது அவரைப் பிடிக்காதவர்கள் யாரேனும் இப்படி கிளப்பி விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை. தற்போது நெப்போலியன் ஹாலிவுட்டில் டெவில்ஸ் நைட் எனும் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

Continue Reading
To Top