fbpx
Connect with us

Cinemapettai

எதிர்பார்ப்பை எகிற வைத்த விஜய் முருகதாஸ்.!விஜய் 62 படத்தில் எத்தனை விஜய்.! என்ன கதைன்னு தெரியுமா.!

News | செய்திகள்

எதிர்பார்ப்பை எகிற வைத்த விஜய் முருகதாஸ்.!விஜய் 62 படத்தில் எத்தனை விஜய்.! என்ன கதைன்னு தெரியுமா.!

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படம், தீபாவளி தினத்தன்று ரிலீஸானது.

mersal

நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில், எந்தப் படமும் செய்யாத சாதனையை ‘மெர்சல்’ படம் செய்திருக்கிறது என்கிறார்கள்.மேலும்

தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்றாலே எதாவது ஒரு முக்கிய சமுக பிரச்சனையை கையில் எடுத்து வெற்றி பெறுவார்கள். இவர்களது கூட்டணியில் வெளியான முதல் படமான துப்பாக்கி படத்தில் ‘ஸ்லீப்பர் செல்’ தீவிரவாதிகள் பற்றி கூறினார்கள்.

mersal-box

முதல் படம் வெற்றி பெஎடுத்து அதிலும் வெற்றி கண்டனர். முதல் இரண்டு படங்களும் விஜயை வேறு இடத்திற்கு எடுத்து சென்றதால் அடுத்து இவர்களது கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த படத்தில் என்ன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள் என்பது அரசால் புரசலாக தெரிய வந்துள்ளது.

thuppakki

விஜய்யின் புதிய படமும் மக்கள் பிரச்சினையை சொல்லும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள்? விவசாயத்தை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய கருத்துக்கள் புதிய படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Thuppakki

இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ஒருவர் விவசாயி. மற்றவர் மாற்றுத்திறனாளி என்று சொல்லப்படுகிறது. இது விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் இளைஞனின் கதையாக உருவாகிறது.

அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குறித்து இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top