Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்காக விட்டுக்கொடுத்த டைட்டில்.! மீண்டும் கையில் எடுக்கும் ராகவா லாரன்ஸ்.!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரைக்கு வந்த படம் மெர்சல் இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது இன்னும் விஜய் ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்தில் இருந்து இன்னும் மீளவில்லை அதற்குள் விஜய் அடுத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது மேலும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்குகிறார் படத்தை சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.
இந்த படம் வரும் திபாவளிக்கு திரையில் வெளியிடுவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் காஞ்சனா3 இந்த படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் படத்தின் ஓவியா,வேதிகா என இரண்டு நடிகைகள் நடிகிரார்கள்.
இந்த படத்தை முடித்துவிட்டு ராகவா லாரான்ஸ் அடுத்ததாக பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் உருவாக்கிவைத்திருக்கும் புதிய கதையில் நடிக்க இருக்கிறார் என செய்திகள் முன்பே கசிந்தது.
அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு காலபைரவா என டைட்டில் வைத்துள்ளார்கள் என செய்திகள் வந்துள்ளன இந்த படத்தின் படபிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் பைரவா இந்த படத்தின் தலைப்பு வைத்தபொழுது இந்த டைட்டிலை ராகவா லாரன்ஸ் பதிவு செய்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த டைட்டிலை ராகவா லாரன்ஸ் விஜய்க்காக விட்டுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
