Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்கு கிடைத்த சர்வேதேச அங்கீகாரம்.! உச்சகட்ட மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!
அட்லி இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வந்த திரைப்படம் தான் மெர்சல் இந்த படத்த்தில் நடிகர் விஜய், சமந்தா,காஜல் ,நித்யா மேனன், வடிவேல்,சத்தியராஜ் ஆகியோர் நடித்தார்கள்.
இந்த திரை படம் பல சர்ச்சைகளை சந்தித்தது ஆனாலும் ரிலீஸ் ஆகி 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது, சமீபத்தில் கூட இந்த படத்திக்கு இங்கிலாந்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் “சிறந்த வெளிநாட்டு திரைப்படம்” என்ற விருதினை தட்டிச்சென்றது.
இதை கேள்விபட்ட விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள், இதை தளபதி விஜய்க்கு கிடைத்த கவுரவம் என கூறி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள், மேலும் தற்பொழுது மெர்சல் படத்திற்கு ஒரு பெருமை கிடைத்துள்ளது, ஆம் அடுத்த மாதம் கொரியாவில் நடக்கவுள்ள Bucheon International Fantastic Film Festival திரைப்பட விழாவில் மெர்சல் படத்தை திரையிடுமாறு அழைப்பு வந்துள்ளது, இது விஜய்க்கு கிடைத்த சர்வேதேச அங்கீகாரம் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
