கல்லா கட்ட விட மாட்டாங்க போல.. விஜய்க்கு சோதனைக்கு மேல வேதனைய குடுக்கறாங்களே!

மாநாடு வெற்றிக்குப் பிறகும் சிம்புவின் கொடி உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மாநாடு படம் வெளியாகி 100 கோடி வசூல் சாதனை செய்தது. சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த மாநாடு படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் சிம்பு உடன் மூன்றாவது முறையாக கூட்டணி போடுகிறார் கௌதம் வாசுதேவ். வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மற்ற பணிகளை விரைவாக முடித்து ஏப்ரல் 14ஆம் தேதி வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே நாளில் விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாக உள்ளது. விஜய், சிம்பு என இரு நடிகர்களின் படமும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டு விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூல் சாதனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சிம்புக்கு மாநாடு படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் ஆகி சிம்புவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக மாநாடு படம் அமைந்துள்ளது.

இந்த இரு நடிகர்களின் படமும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் திரையரங்குகளில் அலை மோதுவது நிச்சயம். ஆனால் பீஸ்ட் மற்றும் வெந்து தணிந்தது காடு படம் ஒரே நாளில் வெளியாவதால் இந்தப் இரு படங்களும் வசூலை பாதிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்து கிடையாது.

இதனால் பீஸ்ட் படத்தை வைத்து 300 கோடி வரை வசூல் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் மண்ணை போட்டதுபோல் பிரம்மாண்ட படங்களும் மோதவுள்ளன. தற்போது வெந்து தணிந்த காடுகள் வெளியாகும் பட்சத்தில் கண்டிப்பாக வசூல் ரீதியாக பீஸ்ட் படம் விஜய்க்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும். எப்போதும் போல விஜய்யின் பீஸ்ட் படமும் பிளாக்பஸ்டர் இடத்தில் முதலிடத்தை தக்க வைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்