fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் விஜய் பட நடிகை ஜெனிலியா.. அசத்தல் கம்பேக்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் விஜய் பட நடிகை ஜெனிலியா.. அசத்தல் கம்பேக்

தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஜெனிலியா. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி நடித்து வந்தார். சச்சின் படத்தில் விஜய், ஜெனிலியா ஜோடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. குறும்புத்தனமான ஷாலினி கேரக்டரில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்று செட்டிலாகிவிட்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் லூசிபர்.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்க உள்ளாராம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு அதற்கான அறிவிப்புகள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

jenilia-cinemapettai

jenilia-cinemapettai

Continue Reading
To Top