fbpx
Connect with us

ராஜமவுலியின் 350 கோடி பட்ஜெட் படத்தில் இணைந்த விஜய் பட நட்சத்திரம்.. கல்யாணத்துக்கு பிறகும் குரு உச்சத்துல இருக்கான் போல!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராஜமவுலியின் 350 கோடி பட்ஜெட் படத்தில் இணைந்த விஜய் பட நட்சத்திரம்.. கல்யாணத்துக்கு பிறகும் குரு உச்சத்துல இருக்கான் போல!

இந்திய திரையுலகமே மொத்தமாக ஒன்றுகூடி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் RRR என்ற படத்தை தான்.

இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பட்ஜெட்டில் சுமார் 350 முதல் 400 கோடி செலவு செய்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கு முன்னணி நடிகர்கள் இருவர் நடிக்கின்றனர்.

அதில் ஒருவர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோராவர். இவர்கள் இருவருக்குமே தெலுங்கு சினிமா மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ராஜமவுலி படங்களுக்கு என்றே ஒரு மவுசு இருக்கிறது. பாகுபலி இரண்டு பாகங்களைக் செலவிட்ட பணத்தை ஒரே படத்தில் செலவிட்டு படத்தை தீயாக உருவாக்கி வருகின்றனர். ராம் சரணின் கதாபாத்திரம் கொண்ட டீசர், படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விஜய், ரஜினி ஆகியோருடன் ஜோடி போட்ட ஸ்ரேயா இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

திருமணத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த ஸ்ரேயாவுக்கு இந்த படம் நல்லதொரு பெயரை கொடுத்து மீண்டும் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வர உதவியாக இருக்கும் என பலரிடமும் ஸ்ரேயா பெருமை பேசி வருகிறாராம்.

Continue Reading
To Top