Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே வார்த்தையில் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபலம்.. வைரல் பதிவு.!
தமிழ் திரையுலகையே ஆட்சி செய்யும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தன்னை தளபதி விஜய் ரசிகன் என்று கூறி பெருமைப்பட்டதும் உண்டு.
அப்படியாக தமிழ்நாட்டை கடந்து பல்வேறு தரப்பிலும் ரசிகர்களை கவர்நதவர் நடிகர் விஜய் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என எல்லாப்பக்கங்களிலும் புகழ் பெற்றவர் தான் தளபதி விஜய்.
தளபதி நடிப்பில் வெளியான “தலைவா” படத்திற்கு தடை உத்தரவு தமிழ் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட தருணத்தில் மற்ற மாநிலங்களில் வெளியிட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காட்சிகள் அன்றைய இணையத்தையே அதிர வைத்தது என்றால் மிகையாகாது.
vijay sri vishnu
அப்படியான ஒரு மாற்று மொழி நடிகர் தான் ஸ்ரீ விஷ்னு. சமூக வலைகளில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீ விஷ்னு தன்னை தளபதி ரசிகன் என அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்பவர் தான். சமீபத்தில் ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்திருந்த கமாண்டுகள் நம்ம ஊரு ரசிகர்களின் கைகளில் சிக்கி தவித்து வருகின்றன.
ரசிகர் ஒருவர் தளபதி பற்றி ஒரே வரியில் கூறுமாறு கூறியதற்கு நடிகர் ஸ்ரீ விஷ்னு இளையதளபதி என எழுதி அருகாமையில் ஃபயர் சிம்பள் கொடுத்திருந்தார். இது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.