விஜய்யை பழி வாங்கிய உதயநிதி.. வசூல் மன்னனுக்கு வந்த சோதனை.!

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வெற்றிப்படங்களின் பட்டியலில் பீஸ்ட் படம் இடம்பெறாதது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படதின் தியேட்டர் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் 110 கோடி வரை வசூல் செய்து வெற்றியடைந்தது என்று தெரிவித்தார்.

இதனிடையே ரெட் ஜெயன்ட் மூவிஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த வருடம் வெளியான 5 வெற்றித் திரைப்படங்களை குறிப்பிட்டு இத்திரைப்படங்களின் வெற்றிக்கு பின்னால் பணியாற்றிய தொழிலாளர்களுடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம் பகிரப்பட்டது.

அந்த பதிவில் விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர்,விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல இரண்டு காதல், சிவகார்த்திகேயன் நடித்த டான்,உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தளபதி விஜய் நடித்த பெஸ்ட் திரைப்படம் இடம்பெறாதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது என்று சொன்னீர்கள், வெற்றிப்படங்கள் லிஸ்டில் பீஸ்ட் படம் இல்லையென்றால் வசூல் ரீதியாக கூட இப்படம் வெற்றியடையவில்லையா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் நீங்கள் அப்போது வெற்றிபெற்றது போல் அறிவித்தது அனைத்தும் பொய்யா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் வராமல் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் திரையரங்குகளில் ரீலீஸான நிலையில்,கதையில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் இயக்குனர் நெல்சனை ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் இத்தனை நாள் பீஸ்ட் படம் வசூல் ரீதியாகவாது சாதனை படைத்துள்ளது என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.

கடந்த ஒரு வருடமாக திரைப்படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு நிறுவனம், முதல் முறையாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களை புகைப்படம் எடுத்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவுரவித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்