Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன பிரபல நடிகை.. இப்ப புலம்பி என்ன பண்றது

vijay-66-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போன பிரபல நடிகை.. இப்ப புலம்பி என்ன பண்றது

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தான் நடிகை மீனா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மீனா ஹீரோயினாக நடித்து வந்த கால கட்டத்தில், அஜித்துடன் சேர்ந்து வில்லன், சிட்டிசன், ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால், விஜய்யுடன் நடிக்க இரண்டு படங்களில் வாய்ப்பு கிடைத்தும் மீனா நடிக்கவில்லை.

விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களான பிரியமுடன் மற்றும் பிரண்ட்ஸ் ஆகிய இரு படங்களில் நடிக்க மீனாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்து விட்டாராம். இருப்பினும் ஷாஜகான் படத்தில் மட்டும் விஜயுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

vijay-meena

vijay-meena

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மீனா இதற்கு பின்னராவது விஜய்யுடன் சேர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top