பீஸ்ட்படத்தில் பாடலைப் பாடும் பிரபல நடிகர்! ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் “தளபதி” என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். சமீப காலமாக இவர் நடிக்கும் அனைத்து படங்களும் அதிரி புதிரி ஹிட் அடித்து வருகிறது. இவரை வைத்து ஒரு படமாவது இயக்கிவிடவேண்டும் என இயக்குனர்களும், தளபதியுடன் ஒரு படத்திலாவது நடித்து நடித்துவிடவேண்டும் என இள நடிகைகளும் தவம் கிடக்கின்றனர்.

தற்போது இவர் “பீஸ்ட்” என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

நெல்சன் முன்னதாக ‘கோலமாவு கோகிலா’, மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களுக்குமே அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் டாக்டர் படத்தில் சிவகார்த்தியன் எழுதியிருந்த “செல்லம்மா” பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai

இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாட உள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளதால், இந்தப்பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

முன்னதாக இந்தப்பாடலை தனுஷ் பாடுவதாக இருந்ததாம். ஆனால், அவர் தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் இந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. எது எப்படியோ… தளபதி ரசிகர்களுக்கு குஷிதான்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்