Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற அஜித்… ஆச்சர்யப்படவைத்த தல.!
அஜித்தும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள்
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் செட்டு போட்டு தான் நடைபெறும் ஏனென்றால் ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்கவும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளி வராமல் இருக்கவும் செட்டு போட்டு படபிடிப்பை நடத்துவர்.
தமிழ் சினிமாவில் அஜித்தும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். வேலாயுதம் படமும் மங்காத்தா படமும் அருகருகே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். அஜித் விஜய்யை வரவேற்றதும் விஜய் அஜித்திற்கு வாட்ச் பரிசளித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.
வேலாயுதம் படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் போண்டாமணி நடித்திருப்பார். வேலாயுதம் படத்தின் செட்டுக்கு வந்த அஜீத் போண்டா மணியை பார்த்து கட்டிப் பிடித்து நலம் விசாரித்ததாகவும். உங்கள் திருமணத்திற்கு வர முடியவில்லை என வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பின்பு அஜித் ஒரு நல்ல மனிதர் எனவும் கூறினார்.
