Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் காதல் கோட்டை பட வாய்ப்பை தவற விட்ட விஜய் பட நடிகை.. பின்னர் புலம்பிய சோகம்!
தல அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது காதல் கோட்டை.
பார்க்காமலேயே காதல் என்ற வித்தியாசமான அணுகு முறையில் உருவான இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இதில் தல அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் தேவயானி இல்லையாம்.

kadhal-kottai
தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படமான பூவேஉனக்காக படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வலம் வந்தவர் தான் அஞ்சு அரவிந்த்.
ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் தங்கை வாய்ப்பும், அஜித் பட வாய்ப்பும் வந்ததால் ரஜினி பட வாய்ப்பை ஓகே செய்து விட்டாராம்.
ரஜினியுடன் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் அஜித்துடன் காதல் கோட்டை படத்தில் நடித்திருந்தால் அவரது மார்க்கெட் பெரிய அளவில் இருந்திருக்கும்.
அஜித் படத்தை தவற விட்டதால் பின்னர் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினாக வலம் வர முடியவில்லை என புலம்பித் தள்ளி விட்டாராம்.
