சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

ஆமா, எனக்கு நாலு தடவை கல்யாணம் ஆயிடுச்சு, அதுக்கு என்ன இப்போ? கடுப்பான விஜய் பட நடிகை

விஜய்யுடன் 2 படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் தனக்கு ஏற்கனவே நான்கு முறை திருமணம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகரான விஜய்யுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மற்றொரு வரவு. வந்த புதிதில் கீர்த்தி சுரேஷ் மொத்த நடிகைகளின் மார்க்கெட்டையும் அசைத்தார்.

அந்த கால கட்டங்களில் கீர்த்தி சுரேஷை பார்த்து நம்ம மார்க்கெட்டை காலி செய்துவிடுவாரோ என நயன்தாராவே பம்மியதாக பல பத்திரிகைகளில் எழுதப்பட்டது. நன்றாக சென்று கொண்டிருந்த தன்னுடைய மார்க்கெட்டை யாரோ ஒருவரின் பேச்சை கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேசை ஏறெடுத்து பார்க்க ஆளில்லை. தெலுங்கு சினிமாவிலும் போனா போகுது என சில பட வாய்ப்புகளைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் முன்னர் போல் கைவசம் நிறைய படங்கள் இல்லை.

ஏற்கனவே பட வாய்ப்பு இல்லை என கடுப்பில் இருக்கும் கீர்த்தி சுரேசை மேலும் டென்சனாக்கும் விதமாக அவருக்கு சமீபத்தில் கல்யாணம் ஆகிவிட்டது எனவும், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதல் கிசுகிசு எனவும் படாதபாடு படுத்தி விட்டார்கள்.

இதனால் டென்ஷனான கீர்த்தி சுரேஷ், ஆமா, எனக்கு ஏற்கனவே நாலு கல்யாணம் ஆயிடுச்சு போதுமா என கடுப்பாகிவிட்டாராம். இதுவரை பத்திரிகைகளில் நான்கு முறை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுதான் கீர்த்தி சுரேஷின் கோபத்திற்கு காரணம் எனவும் கூறுகின்றனர் கீர்த்தி வட்டாரங்கள்.

keerthisuresh-cinemapettai
keerthisuresh-cinemapettai

Trending News