Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷுக்கு கொக்கி போட்ட விஜய் பட நடிகை.. ஆழம் தெரியாமல் காலை விடாதே என எச்சரிக்கும் ரசிகர்கள்!
உலகளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். படத்திற்கு படம் தன்னுடைய சினிமா உயரத்தை வளர்த்துக் கொண்டே செல்கிறார். தற்போது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷுடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் தனுசை பற்றிய கிசுகிசுக்கள் இன்னமும் கோடம்பாக்க வட்டாரங்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
பல முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களில் சிலர் தனுஷ், நடிகைகள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கான ஆள் என பப்ளிக்காகவே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் கிசுகிசுக்கள் என்பதால் ரசிகர்களும் கிசுகிசுவாகவே எடுத்துக் கொண்டால் நல்லது.
ஏன் சமீபத்தில் அமலாபால் இயக்குனர் விஜய் திருமண விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என அமலாபாலின் முன்னாள் மாமனார் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் கூறியதை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா.
இப்படியிருக்கையில் தனுஷுடன் விரைவில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் விரும்புவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுசும் விரைவில் அது நடக்கும் என ரிப்ளை செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஆளுதான் ஒன்லி, அந்த விஷயத்துல நம்ம ஆளு செம கில்லி என கிண்டல் செய்து வருகின்றனர்.

malavika-mohanan-dhanush-tweet
இருந்தாலும் நடிப்பில் அசுரன் என்றால் அது தனுஷ் மட்டும்தான். விரைவில் மாளவிகா மோகனன் தனுஷுடன் இணைந்து நடிக்க சினிமா பேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.
