சினிமாவில் வாய்ப்பு இல்லை.. சீரியலுக்கு வந்த விஜய் பட நடிகை

சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகள் பலரும் சீரியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சினிமாவில் இந்த நடிகை உச்ச நட்சத்திரமாக வருவார் என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றம் கொடுத்த நடிகைகளுக்கும் அதே கதி நடந்து வருகிறது.

தற்போதெல்லாம் சினிமாவிலிருந்து சீரியலுக்கு வருவதைவிட சீரியலிலிருந்து சினிமாவுக்கு செல்லும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக வாணி போஜன், பிரியா பவானி சங்கர் போன்றோரைச் சொல்லலாம்.

அதேபோல் சினிமாவில் உச்ச நடிகைகளாக இருந்த தேவயானி, ரம்யா கிருஷ்ணன், ராதிகா போன்ற பல நடிகைகளும் சின்னத்திரை சீரியலுக்கு வந்து ஒரு கலக்கு கலக்கியுள்ளனர். அந்த வகையில் அடுத்த எதிர்பார்ப்பாக இருப்பது விஜய்யின் மதுர படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சோனியா அகர்வால் தான்.

சோனியா அகர்வால் சினிமாவுக்கு வந்த புதிதில் இவர்தான் தமிழ் சினிமாவின் அடுத்த டாப் நடிகை எனும் அளவுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்றார். ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை.

சினிமாவில் புகழ் பெறத் தொடங்கியவுடன் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தாமல் பார்ட்டி, மது என தன்னுடைய கேரியரை கெடுத்துக்கொண்டார் சோனியா அகர்வால். இதனாலேயே அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து சமீபகாலமாக குணச்சித்திர நடிகையாக மாறினார்.

தற்போது அதையும் தாண்டி சீரியலுக்கும் வந்துவிட்டார். ஏற்கனவே சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்னும் சீரியலில் நடித்துவரும் சோனியா அகர்வால் இன்னும் புதிய சீரியல் ஒன்றில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். தற்போதைக்கு சினிமாவைவிட சீரியலில் நல்ல வரவேற்பு இருப்பதால் இதையே தொடரலாம் எனவும் முடிவு செய்துள்ளாராம்.

soniya-agrawal-cinemapettai
soniya-agrawal-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்