Connect with us
Cinemapettai

Cinemapettai

gabriella charlton vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பை உதறிய 21 வயது நடிகை.. இப்ப விளம்பரத்தில் நடிக்கும் சோகம்!

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றன. கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட கோடிக்கணக்கில் வசூல் செய்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்தது.

இப்படி தமிழ் சினிமாவின் தூணாக இருக்கும் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல நடிகை ஒருவர் கைவிட்டதாக கூறி தற்போது மண்டையில் கை வைத்து என்ன செய்வது என தெரியாமல் புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நடிகை யார் என்பதை பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் என்ற சீசன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார் கேப்ரியலா. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 3  திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கச்சியாக  நடித்தார்.

gabrilla-cinemapettai

gabrilla-cinemapettai

என்னதான் ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய  படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் எதிர்பார்த்தபடியே ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆனால் கேப்ரில்லாவிற்கு ஏற்கனவே  பிகில் மற்றும் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை  தவற விட்டுள்ளார் கேப்ரில்லா.

மிகப்பெரிய வாய்ப்பை நிராகரித்த பிறகு இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் எந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் விஜய் சாருடன் நடித்திருந்தால் கூட நமக்கு ஏதாவது ஒருசில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். அதையும்  நம்ம  மிஸ் செய்து விட்டோம் என வீட்டிலேயே அழுது புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படவாய்ப்பு இல்லாததால் விளம்பரத்தில் நடித்து வரும் சோகம் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top