Connect with us
Cinemapettai

Cinemapettai

நாட்டாமை படத்தில் சரத்குமார் தம்பியாக நடிக்க இருந்த தளபதி விஜய்? அந்த நடிகைக்காக வேண்டாம் என்றாராம்!

thalapathy-vijay-nattamai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாட்டாமை படத்தில் சரத்குமார் தம்பியாக நடிக்க இருந்த தளபதி விஜய்? அந்த நடிகைக்காக வேண்டாம் என்றாராம்!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் நடிக்க இருந்த கதாபாத்திரங்களில் வேறொரு நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களும் இந்தமாதிரி வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர்.

அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் நாட்டாமை. இந்த படத்தின் வெற்றி மொத்த தென்னிந்திய சினிமாவையும் அதிர வைத்தது.

அந்த படத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா, சங்கவி, ராஜா ரவிந்தர், கவுண்டமணி, செந்தில், விஜயகுமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சிற்பி இசையமைத்த இந்த படத்தை ஆர்பி சவுத்ரி தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் சரத்குமாருக்கு தம்பி வேடத்தில் நடித்த ரவீந்தர் ராஜா கதாபாத்திரத்தில் முதலில் தளபதி விஜய்யை நடிக்க வைக்கலாம் என கேஎஸ் ரவிக்குமார் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆலோசனை செய்தார்களாம்.

ஆனால் அந்தப் படத்தில் ரவீந்தர் ராஜாவுக்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார். ஏற்கனவே சங்கவி மற்றும் தளபதி விஜய் ஆகியோர் பற்றிய கிசுகிசுக்கள் கோலிவுட் வட்டாரங்களில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டதால் அதை விஜய் தவிர்த்து விட்டதாக தெரிகிறது.

இந்த தகவலை டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சித்ரா லட்சுமணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top