தளபதி விஜய். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன். லட்சகணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு தமிழ் நடிகர். இவர் தும்பினால் கூட சமூக வளைதளங்களில் ட்ரெண்டாக்கி அழகு பார்க்கும் ரசிகர் பட்டாளம்.

ஆனாலும், தந்தை தயவில் சினிமாவிற்கு வந்தவர், ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என இவரை பார்த்து சிரிப்பவர்கள் ஏறாலம். ஆனால், நாளுக்கு நாள் இவரின் ரசிகர் பட்டாளம் விரிவடைந்து கொண்டுதான் போகிறது.

தன்னை புறம் பேசுபவர்களுக்கு இவர் தந்த பதில் ” உன் பின்னாடி நின்னு பேசுரவனை பத்தி கவலை பாடதே..! நீ அவனை விட இரண்டடி முன்னால் இருக்கிறாய் என்பதை நினைந்து பெருமைப்படு” என்பதுதான். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்பதை கருத்தில் கொண்டு தன்னுடைய வழியில் பயணித்து கொண்டிருக்கிறார். சினிமா பிரச்னைகளை திரும்பி கூட பார்க்காத இவர் நாட்டில் நடக்கும் பொதுப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் தமிழ் மக்கள் மீதனா வேட்கையை பதிவு செய்கிறார்.

இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய். சில சிறந்த படங்களை தவற விட்டிருக்கிறார். அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

முதல்வன்
உன்னை நினைத்து
தீனா
தூள்
ஆட்டோகிராஃப்
சண்டக்கோழி
வேல்
சிங்கம்

இந்த பட்டியலில் உள்ள சண்டைக்கோழி படத்தை ஏன் தவறவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை என்று ஒரு பேட்டியில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

இப்படி ப்ளாக்பஸ்டர் படங்களை தவற விட்ட நடிகர் விஜய் ஒரு நாள் கூட ஓடாத இன்னொரு படத்தையும் தவறவிட்டு பயங்கரமாக எஸ்கேப் ஆகியுள்ளார். அந்த படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அநேகன்.