Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-house-raid

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னது விஜய் கைது செய்யப்படலாமா? நெருக்கடியில் தளபதி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தை ஆரம்பித்த நேரமோ என்னமோ விஜய் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி தளபதியை சோதித்து விட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கை பாதியில் நிப்பாட்டி விஜய்யை அழைத்து சென்றுள்ளனர் வருமானவரித் துறையினர்.

அதுவும் தன்னுடைய சொந்த காரில் போக கூட விடாமல் அவர்களுடைய வாகனத்திலேயே அழைத்துச் சென்று கொடுமை படுத்தியுள்ளனர். இதெல்லாம் பார்க்கும் பொழுது கண்டிப்பாக விஜய்க்கு ஒரு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் போல் தான் தெரிகிறது.

விஜய் வாகனத்திலேயே 2 வருமான வரித்துறையினரை அழைத்துக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.தற்பொழுது இரண்டாவது நாளாக விஜய் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அன்புச்செழியன் வீட்டில் 65 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர் வருமான வரித்துறையினர்.

பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவை அனைத்தும் பிகில் படத்தின் வசூலால் வந்த பிரச்சினை போல் தான் தெரிகிறது. 300 கோடி வசூல் செய்தது என சமூக வலைத்தளங்களில் பரப்ப, அப்படியென்றால் விஜய் சம்பளம், இயக்குனர் சம்பளம் எவ்வளவு என்ற கணக்கில் தொடங்கி தற்போது வரை சோதனை சென்று கொண்டிருக்கிறது.

அட்லீயின் தந்தை ஒரு ஆடிட்டர் என்பதால் அவர் தப்பித்து விடுவார். தற்போது பிகில் படத்தின் விநியோகிஸ்தர்கள் ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனத்திலும் வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் பிகில் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் நடந்த சோதனையில்தான் விஜய் சம்பளம் பற்றிய தகவல் இருந்ததாகவும் அதனாலதான் விஜய்யை அழைத்து விசாரிப்பதாக கூறுகிறார்கள். இதில் விஜய் மீது எந்த குற்றமும் இருப்பதாக செய்திகள் வரவில்லை.

விஜய் மீது வழக்கு தொடர்ந்து அவர் வரி ஏய்ப்பு செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றே செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் விஜய் இவ்வளோ பணம் சம்பாரிக்கும்போது வரி கட்டாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் இது அரசியல் சூழ்ச்சி என்பதிலும் சந்தேகமே இல்லை எனவும் விவாதமே நடக்கிறது.

விரைவில் தளபதி விஜய்யின் அரசியல் என்ட்ரி ஆரம்பம்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top