விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

mersal

அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் 220 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கில் மெர்சல் திரைப்படம் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் வெளியானது. அங்கும் அதிரடியான வசூலில் சாதனை படைத்துள்ளது.

mersal

விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் படத்தின் வெற்றியை படக்குழுவினர் வெளிநாடுகளில் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தின் டீஸரை, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் ஓவர்டேக் செய்துள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘கபாலி’. ராதிகா ஆப்தே, நாசர், கிஷோர், கலையரசன், தினேஷ், தன்ஷிகா, ஜான் விஜய், ரித்விகா எனப் பலர் நடித்திருந்தனர்.

kabali

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

‘கபாலி’ படத்தின் டீஸர், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கலைப்புலி எஸ்.தாணுவின் யூ ட்யூபில் வெளியிடப்பட்டது.

இந்த டீஸரை, இதுவரை (16.11.2017 – மதியம் 1.20 மணி) 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 834 பேர் பார்த்துள்ளனர். இந்த டீஸர்தான், இந்தியாவிலேயே அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட டீஸர் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.Rajini-Kabali

ஆனால், அந்தப் பெருமையை விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் தட்டிச் சென்றுள்ளனர். இந்த டீஸரை இதுவரை 3 கோடியே 46 லட்சத்து 17 ஆயிரத்து 114 பேர் பார்த்துள்ளனர்.

இதன்மூலம், ‘மெர்சல்’ டீஸர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இத்தனைக்கும் இந்த வருடம் செப்டம்பர் 21ஆம் தேதி தான் இந்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய சாதனையை ‘மெர்சல்’ டீஸர் பெற்றுள்ளது.

அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.