அடேங்கப்பா விஜய்யின் மெர்சல்படம் கொடுத்துள்ள ஷேர் மட்டும் இத்தனை கோடியா.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

அடேங்கப்பா விஜய்யின் மெர்சல்படம் கொடுத்துள்ள ஷேர் மட்டும் இத்தனை கோடியா.!

News | செய்திகள்

அடேங்கப்பா விஜய்யின் மெர்சல்படம் கொடுத்துள்ள ஷேர் மட்டும் இத்தனை கோடியா.!

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் மெர்சல். தளபதி விஜய், நித்யா மேன்ன, சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே சூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க அட்லி இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையத்திருந்தார்.

படம் வெளியாகி பிரச்சனை மேல் பிரச்சனையாக வந்து பின்னர் ஓய்ந்து படம் வெற்றிகரமாக திரையில் ஓடியது. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தற்போது இன்னும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

mersal

இந்த வசூலில் தமிழ்நாட்டின் ஆல் டைம் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது மெர்சல்.

விஜய் நடித்து வெளிவந்த ‘மெர்சல்’ படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது. இப்படத்தைப் பற்றி பல வசூல் விவரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

mersal-box

இந்த 2017ம் வருடத்தில் ஒரு நேரடித் தமிழ்ப் படம் பல தியேட்டர்களில் மூன்றாவது வாரத்தையும் கடப்பது முதல் முறை நிகழ்கிறது. இந்தப் படத்தின் வசூல் என்பது பெரிய வசூல்தான் என்பதற்கு இது ஒன்றே போதும்.

தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இப்போதும் சுமார் 300 தியேட்டர்களுக்கும் மேல் இப்படம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

mersal movie review

mersal vijay

தமிழ்நாட்டில் 120 கோடி ரூபாய் வசூலையும் வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் வசூலையும் இப்படம் கடந்திருக்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது மொத்த வசூல் நிலவரம். அதிலிருந்து ‘ஷேர்’ தொகையாக அதாவது பங்குத் தொகையாக சுமார் 110 கோடி ரூபாயை இப்படம் கொடுத்துள்ளது.

mersal

தமிழில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் ‘ஷேர்’ கொடுத்த திரைப்படம் என்ற பெருமையை ‘மெர்சல்’ பெற்றுள்ளது.

படத்தை வாங்கிய அனைவருக்கும் இந்தப் படம் லாபத்தைக் கொடுத்துள்ளது. இது போன்று பெரிய நடிகர்களின் படங்கள் வசூலித்தால் மட்டுமே திரையுலகம் கொஞ்சமாவது காப்பாற்றப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top