விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா.. காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கி வருகிறார். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபகாலமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என அனைத்து நடிகைகளும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை முன்னணி நடிகை ஜோதிகா மறுத்துள்ளார்.

vijay-jyothika-thirumalai
vijay-jyothika-thirumalai

விஜயின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் மெர்சல். அட்லி இயக்கத்தில் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் கவர்ந்த இந்த படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்து இருந்தனர்.

இப்படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜோதிகா தான். ஆனால் அட்லி கதை சொல்லும் போது ஸ்கிரிப்ட் குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக தான் ஜோதிகா இப்படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.

விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இன்று வரை இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு விஜய், ஜோதிகா கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. எனவே நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர்கள் இருவரையும் திரையில் பார்க்கலாம் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்