இயக்குனர் அட்லி தளபதி கூட்டணியில் இணைந்து பிரமாண்டமாக எடுத்த படம் மெர்சல் இந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் ஹிட் ஆனது இதனை தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்தது இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்தார்.

mersal

 

விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன்,காஜல் ,சமந்தா என மூன்று நடிகைகள்  நடித்தார்கள்,வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்து அசத்தினார்.மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

mersal

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் கடந்த வருடத்தில் நல்ல வசூல் செய்த படத்தில் மெர்சல் படமும் ஓன்று,இந்த படம் சென்னையில் அபிராமி திரையரங்கில் தினமும் ஒரு ஷோ ஓடின இன்றுடன் மெர்சல் படம் 100 வது நாளை எட்டியுள்ளது  இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது டிவிட்டர் பக்கத்தில், மெர்சலை வெற்றிப் படமாக்கிய படக்குழுவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.