நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், பல்வேறு தடைகளைத் தாண்டி அறிவித்தபடி தீபாவளியன்று வெளியானது. தலைப்பு முதல் தகுதிச் சான்றிதழ் வரை பல்வேறு சிக்கல்களை ‘மெர்சல்’ படம் சந்தித்தது.

தலைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில், படத்துக்கு தணிக்கைக் குழு சான்றிதழ் அளிப்பதில் இழுபறி ஏற்பட்டது.

mersal

விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கிய நிலையில், படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை தீபாவளிக்கு முதல்நாள் தான் வழங்கியது.

`தெறி’யையும்விட இன்னும் அதிக மாஸ் ஏற்றி ஒரு படம் கொடுக்க நினைத்திருக்கிறார் விஜய். அதில் வெற்றிதான். விஜயின் 3 கதாபாத்திரங்களையும் வித்தியாசம் காட்டும்படி எழுதிய விதமும் அதை திரையில் கொண்டு வந்த விதமும் நேர்த்தி.

மெர்சல் படம் பார்ப்பதில் விஜய் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரின் மண்டை உடைக்கப்பட்டது.

mersal

மெர்சல் படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே மாற்றிவிட்டது. விஜய் ரசிகர்கள் இணைந்து பேனர், கட் அவுட் வைத்தல் என தனித்தனி குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க தஞ்சை, பேராவூரணியில் மெர்சல் படம் பார்க்க, திரையரங்கு இருக்கையில் அமருவது குறித்து ஏற்பட்ட போட்ட போட்டி மோதலாக மாறி பெரும் கைகலப்பானது.

mersal movie review
mersal vijay

இந்த கைகலப்பு அடிதடியாகி 4 பேரின் மண்டை உடைந்தது. காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட அரங்கை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

ரத்த காயத்துடன் ஓடிவந்த அந்த ரசிகர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சக ரசிகர்கள்.
இந்த சம்பவம் பெரும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.