mersal

மெர்சல் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் திரைக்கு வரும் முன்பே ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து விட்டது.

ஆனால் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டு வெற்றிகரமாக மெர்சல் இன்று திரைக்கு வந்துள்ளது. காலை 7 மணி முதல், காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

mersal

முன்னதாக, தீபாவளியான இன்று மெர்சல் திரைப்படம் வெளியாவதற்கு உதவிய முதலமைச்சருக்கு நடிகர் விஜய் நேரில் நன்றி தெரிவித்தார். முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற விஜய், கேளிக்கை வரி குறைப்பிற்கும், மெர்சல் படத்திற்கு இருந்த தடையை நீக்க உதவியதற்கும் நன்றி தெரிவித்தார். இந்த தகவலை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இப்படத்தின் தலைப்புக்கு எதிராக வழக்கு நடைபெற்று அதன்பின் அதிலிருந்தும் தீர்வு கிடைத்து படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

mersal

அந்த சூழ்நிலையில் விலங்குகள் நல வாரியம் படத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படம் வெளியாகுமா? என்ற அச்சத்தை ரசிகள் மத்தியில் ஏற்படுத்தின.

ஆனால், அனைத்து தடைகளையும் தகர்த்து இன்று வெள்ளித்திரையை அடைந்துவிட்டது மெர்சல். ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் இன்று வெளியான மெர்சல் திரைப்படத்தை விஷமிகள் சிலர் சமூக வளைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

vijay

இப்படியாக ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களை அடையாளம் கண்டு சார்ந்த சமூக ஊடக மென்பெருளே அதனை தடை செய்து அழித்துவிடுகிறது. ஆனாலும், மீண்டும் மீண்டும் Live-ஆக திரையரங்கில் இருந்து சில விஷமிகள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இது விஜய் ரசிகர்களை அதிர்சிகுள்ளாக்கியுள்ளது.