சீனாவில் வெளியாகும் விஜய்யின் திரைப்படம்.. ஏன்பா! 4 வருஷமா கோமாலயா இருந்தீங்க

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் படம் வெளிவந்த காலத்தில் படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.

அதிலும் குறிப்பாக ஜிஎஸ்டி வரியை பற்றி விஜய் பேசிய வசனங்கள் பெரிய அளவில் சர்ச்சை ஆக்கப்பட்டு இந்திய அளவில் இந்த காட்சி பேசப்பட்டது. இதுவே படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது என ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் கூறிவந்தனர். ஆனால் விஜயின் வாழ்க்கையில் முக்கியமான படங்களில் மெர்சல் படமும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது விஜய் நடிப்பில் 3 கதாபாத்திரத்தில் வெளியான இப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு 100வது படமாக அமைந்து பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது. மேலும் படத்தில் காட்சிக்கு காட்சி விஜய்க்கு மாஸ் வசனங்களை வைத்து அட்லி படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் வலு சேர்த்திருப்பார்.

mersal
mersal

அதுமட்டுமில்லாமல் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பாக இவர் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. அதன்பிறகு இப்படத்தை உலக நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வந்தனர்.

விஜய்யின் படங்களுக்கு சீனாவிலும் வரவேற்பு இருப்பதால் மெர்சல் படத்தை டப்பிங் செய்து வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக படத்தை இன்று வரை வெளியிடாமல் காத்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் முரளி வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் கூடிய விரைவில் இப்படம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்