fbpx
Connect with us

விஜய்யின் மெர்சல் படம் ஒத்திவைப்பு.! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

mersal movie review

News / செய்திகள்

விஜய்யின் மெர்சல் படம் ஒத்திவைப்பு.! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

கடந்தவாரம் புதனன்று வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றது விஜய் நடித்த மெர்சல் படம். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள  வசனங்களுக்குப்  மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சி தவிர எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

mersal

மெர்சல் படம் கடந்த ஒரு வாரமாக திரை உலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெர்சல் படத்தில் ஆட்சே பகரமான வசனங்கள் நீக்கப்படுமா? என்ற நிலையும் ஏற்பட்டது. இறுதியில் காட்சிகளோ, வசனங்களோ நீக்கம் இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மெர்சல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழில் வெளியான இந்த படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

mersal vijay

mersal vijay

ஆனாலும் படம் தொடர்ந்து நல்ல வசூலையே குவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.துவக்கத்தில் தமிழோடு சேர்த்து தெலுங்கிலும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பிறகு அது நிறுத்திவைக்கப்பட்டது.

பின், மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’, நாளை வெளியாகும் என சொல்லப்பட்டது. இன்று தெலுங்கு பதிப்பின் சென்சார் உரிமம் வழங்கப்பட வேண்டிய நிலையில், சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டன.

mersal

ஆனால், அதன் பின்னும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியானது. இதற்கிடையே தற்போது நாளை படம் வெளியாகாது என தேனாண்டாள் ஃபில்ம்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது.

வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வமான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழைத் திரும்பப் பெறக்கூறி தொடரப்பட்ட வழக்கு ஒன்று விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top