mersal business

அஜித்தின் விவேகம் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்து ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருப்பது விஜய்யின் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. அதில் கலந்துகொள்பவர்கள் யார் யார் என இனிதான் தெரியும்.mersal audio launchபடக்குழுவும் நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்க இருக்கும் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டிருக்கும் அந்த மேடையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதனை ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். அதுமட்டும் இல்ல விஜய் இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை பேசுவார் எனவும் சொல்கிறார்கள். அரசியலையும் சேர்த்து.