Videos | வீடியோக்கள்
தளபதி விஜய்யுடன் நடித்துள்ள மேகா ஆகாஷ்.. யாரும் அதிகம் பார்த்திராத வீடியோ! செம வைரல்!
தளபதி விஜய்க்கு 46 வயதான நிலையிலும் இன்னும் இளமையாக தோற்றமளிப்பதால் அவருடன் ஜோடி போட பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சில வருடங்களுக்கு முன்புவரை தளபதி விஜய் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். அதிலும் முக்கியமாக ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தில் நடித்தார்.
மலையாள நடிகர்களுடன் சேர்ந்து நடித்த ஜோஸ் ஆலுக்காஸ் வீடியோ அப்போதே பெரிய அளவில் பேசப்பட்டது. மலையாள நடிகர் பகத் பாசிலுடன் விஜய் நடித்திருந்தார்.
அதே போன்ற ஒரு நகை விளம்பர வீடியோவில் தான் பிரபல நடிகை மேகா ஆகாஷ் உடன் தளபதி விஜய் நடித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் மேகா ஆகாஷ் தற்போது தமிழில் தளபதி விஜய்யுடன் ஒரு படத்திலாவது ஜோடி போட்டு விட வேண்டும் என ஏங்கி கொண்டிருக்கிறாராம்.
அதற்காக அவரது வட்டாரங்களிலிருந்து வேண்டுமென்றே இந்த விளம்பர வீடியோவை மீண்டும் வைரலாக்கி விட்டார்களாம். ஆனால் அந்த விளம்பரத்தில் விஜய்க்கு தங்கை போன்ற கதாபாத்திரம் தான் நடித்துள்ளார் போல் தெரிகிறது.
