Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யை சந்தித்த பிரபல இயக்குனர்.. செம்ம ட்ரீட் கிடைக்குமா
நடிகர் விஜய் அரசியலுக்கு அச்சாரம் போட்டுவருவது ஊரறிந்த விஷயம். ஆனால் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதே இப்போதைக்கு பெரும் கேள்வி.
ஏனினும் வருக்கால அரசியலுக்கு ஏற்பஅவரது படத்தில் அவருடைய கதாபாத்திரங்கள் அண்மைக்காலமாக உருமாறி வருவதை கவனித்து தான் ஆக வேண்டும்.
இந்த சூழலில் எப்போதுமே மக்கள் நலன் சார்ந்த தத்துவங்களை அடிப்படையாக கொண்டு படம் எடுப்பவரான பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.
ஷங்கரும் விஜய்யும் புதிய படத்தில் இணைவர்களா என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. இதற்கு காரணம் அண்மையில் விஜய்யை ஷங்கர் போய் சந்தித்து பேசி உள்ளார். எனவே இருவரும் சேர்ந்து ஒரு படத்தை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருப்பது உண்மை.
ஏனெனில் ஏற்கனவே விஜய் மற்றும் ஷங்கர் இணைந்து நண்பன் படத்தை கொடுத்தனர். இநத் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அத்துடன் பல வருஷத்துக்கு விஜய்யின் பெயர் சொல்லும் படமாகவும் அமைந்தது.
