சமூக சேவையில் கைகோர்க்க போகும் விஜய்.. புரியாமல் வதந்தி கிளப்பும் கும்பல்

தளபதி விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபல்லியின் இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிபல்லி தெலுங்கானாவின் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தளபதி 66 திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதையை மையமாக வைத்து வம்சி பைடிபல்லி தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனிடையே சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிபல்லி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் மத்திய அமைச்சர் சந்தோஷ் நேரில் சந்தித்து உரையாற்றி உள்ளனர்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவிற்கு தளபதி விஜய் பூங்கொத்து கொடுத்தும், தெலுங்கானா முதலமைச்சர் தளபதி விஜய்க்கு சால்வை அணிவித்தும், பரிசுகளை வழங்கியும் கௌரவித்தார். மேலும் மத்திய அமைச்சர் சந்தோஷம் சந்தித்து தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிபல்லி உரையாற்றினர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் சந்தோஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யும் இயக்குனர் வம்சி பைடிபல்லியையும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் தன்னுடைய கிரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பிற்கு விரைவில் தளபதி விஜய்யை வைத்து மரம் நடும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் இயக்குனர் வம்சி பைடிபல்லி தமது ட்விட்டர் பக்கத்தில், தளபதி விஜயுடன் தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரை சந்தித்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் தளபதி விஜய் அந்த புகைப்படத்தில் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் அணிந்து மாஸாக இருந்தார்.

இதனிடையே இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு என அரசல்புரசலாக பேசி வந்த நிலையில் இது குறித்து தெளிவான விளக்கம் தளபதியின் தரப்பிலிருந்து வரவில்லை. மேலும் இந்த சந்திப்பு எதார்த்தமானது தான் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்