பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்த தோனி.. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் ஏக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தெலுங்கு ஹிந்தி என அணைத்து மொழி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.தொடர்ந்து இப்படத்தின் பற்றிய அப்டேட் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பீஸ்ட் படத்தில் யோகி பாபு நடிப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் செல்வராகவன் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் பெரிய செட் போட்டு பாடல் காட்சியை எடுத்து வருகின்றனர்.

vijay dhoni
vijay dhoni

ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால் கிரிக்கெட் வீரரான தோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ள தோனியை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். தற்போது தோனி பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் விஜயின் தோனியும் இருவரும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் விஜயின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் துப்பாக்கி ஷூட்டிங் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதனை முடித்து விட்டு அப்படியே வந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்