Connect with us
Cinemapettai

Cinemapettai

kavin vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் ஸ்டைலை ஃபாலோ செய்யும் பிக் பாஸ் கவின்.. ராக்கெட் போல் புகைப்படத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் கவின். அதன்பிறகு நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் விஜய் டிவி அழைத்தவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக்பாஸில் 94 நாட்கள் வெற்றிகரமாக இருந்ததால் கவின்னை அனைவரும் பிக் பாஸ் கவின் என அழைத்து வந்தனர். தற்போது கவின்னுக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கைவசம் இல்லாததால் கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது, பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் கவின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்த செக்குடு ஷர்ட் அணிந்தபடி காதில் ஹெட்போன் வைத்தபடி மற்றும் கழுத்தில் ஐடி கார்டு போட்டபடி சென்றுள்ளார்.

kavin

kavin

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டர் கெட்டப்பை அப்படியே ஃபாலோ செய்கிறார் என கூறிவருகின்றனர். எந்த நிகழ்ச்சிக்காக கவின் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை என கவின்னை சுற்றி உள்ள சினிமா நண்பர்கள் கூறி வருகின்றனர்.

விஜய்யின் ஸ்டைலை கவின்  ஃபாலோ செய்கிறார் என விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் எது எப்படியோ லாஸ்லியாவை ஒழுங்கா பார்த்துகிட்டா சரி எனவும் பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டலாகப் பேசி வருகின்றனர்.

Continue Reading
To Top