Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ்டர் ரிலீஸ் தேதியை உளறிய விஜய்யின் தந்தை.. கடுப்பில் தளபதி!
சமீபகாலமாக தளபதி விஜயின் தந்தை சந்திரசேகர் விஜய்யை அதிகமாக சங்கடப்பட வைப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தளபதி விஜய்.
விஜய்யின் சமீபத்திய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்று வருவதால் அவரை வைத்து படம் தயாரிக்க அனைவரும் ரெடியாக இருக்கின்றனர்.
ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர்.
விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படம் தான் மாஸ்டர்.
மாஸ்டர் ரிலீஸ் தேதியில் பல குளறுபடிகள் நடைபெறும் நிலையில் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கண்டிப்பாக மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளிவரும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல்தான் சமீபத்தில் தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார்.
விஜய் ரகசியமாக செய்ய வேண்டும் என நினைப்பதை சந்திரசேகர் அப்பட்டமாக வெளியே தெரிவித்து விடுவதால் அவர் மீது சற்று சங்கடத்தில் உள்ளாராம் தளபதி விஜய்.

master
