நடிகர் விஜய்யின் திரை பயணத்தில் திருப்பு முனையாக இருந்த படம் தான் பூவே உனக்காக. இதில் அவர் காதலித்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்து தன் காதலியை சிரமப்படுத்தாமல் விலகிவிடுவார்.  மிக அருமையாக காதலை எடுத்துரைத்த படம்.

இந்த படம் கலப்பு திருமணம் பற்றிய கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது. மிக பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது. இதே பாணியில் கர்நாடகாவில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து அசத்தியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  கவர்ச்சி புகைப்படத்தை கசியவிட்ட டாப்சி.!மோசமாக கமென்ட் செய்த நெட்டிசன்.!பதிலடி கொடுத்த டாப்சி.!

கர்நாடகாவின் கார்வார் அருகே அமைத்திருக்கும் கிராமம் யல்லபுரா. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ரகீம்கான் மற்றும் காளம்மா.

ரகீம் கான் மற்றும் காளம்மா ஆரம்பக் காலத்தில் நட்பாக பழகி பிறகு காதல் உறவில் இணைந்தவர்கள். இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

முஸ்லீம், இந்து என்ற மத வேறுபாடு ஒரே காரணம் காட்டி இவர்களது இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு கூறி வந்தனர். மதம் மட்டுமே இவர்களது காதலுக்கு பெரும் தடையாக இருந்து வந்தது.

அதிகம் படித்தவை:  ரஜினி ஒருநாள் ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவார், மறுநாள் அவருக்கே ஆதரவை தெரிவிப்பார்..ரஜினி மீது குற்றச்சாட்டு பிரபல தலைவர்.

பூவே உனக்காக கிளைமாக்ஸ்!

உடனே இதற்கு தீர்வாக ரகீம் கான் ஆர்யாவாக இந்து மகனாக மாறி தனது ஆசை காதலி காளம்மாவை பூவே உனக்காக பாணியில் மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.