வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரிலையன்ஸ் உடன் கைகோர்க்கும் தளபதி விஜய்.. சினிமாவைத் தாண்டி லாபம் பார்க்க பலே திட்டம்

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தில் உள்ள விஜய்க்கு சம்பளம் 120 கோடி. வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே வெளியிடுகிறார். இவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து அரசியல் கணக்குகளையும் அவ்வப்போது செய்து வருகிறார். அதையும் தாண்டி பல ஊர்களில் பல தொழிலும் செய்து வருகிறார்.

இவர் செய்யும் இவருக்கு பிடித்தமான தொழில் திருமண மண்டபம். சென்னையில் சாலிகிராமத்தில் ஷோபா திருமண மண்டபம் வடபழனி இல் ஒரு திருமண மண்டபம். அடுத்து போரூரில் சங்கீதா திருமணம் என்று மனைவியின் பெயரில் நடத்தி வருகிறார்.

இது மட்டுமில்லாமல் புதுக்கோட்டையில் திருமண மண்டபம் வைத்துள்ளார். இன்னும் பலமாவட்டங்களில் திருமண மண்டபங்களை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ளத் திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை 8 லட்சத்திற்கு 15 வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார்.

இப்பொழுது இந்த திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு மாத வாடகை 12 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடப் போவதாக தெரிகிறது. இன்னும் சில மண்டபங்களை இதேபோல் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு விஜய் யோசித்து வருகிறாராம்.

இது அரசியல் ரீதியான நகர்வு என்று பேசப்படுகிறது. எதற்கு ரிலையன்ஸ்னிடம் திடீரென்று விஜய் அவர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார் என்று அனைவரையும் சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு ஈடுபடுவது அரசியல் வேலையை வேகமாக தொடங்குவதாக ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யின் ஒவ்வொரு முயற்சியும் அவர் ஏற்கனவே புதுவை முதல்வர், ஆந்திர முதல்வர், பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்து இப்பொழுது ரிலையன்ஸ்னிடம் கூட்டு சேர்வது விஜய் ஏதோ செய்யப்போகிறார் என்று மட்டும் நன்றாக தெரிகிறது.

- Advertisement -

Trending News