fbpx
Connect with us

Cinemapettai

அசிங்கமாய் திட்டு வாங்கிய விஜய் மல்லையா.. தேங்க்யூ சொல்லி கிளம்பிய வீடியோ

vijay-mallya

India | இந்தியா

அசிங்கமாய் திட்டு வாங்கிய விஜய் மல்லையா.. தேங்க்யூ சொல்லி கிளம்பிய வீடியோ

விஜய் மல்லையா இந்திய வங்கிகளிடம் 9,000 கோடி கடன் பெற்று தப்பிச் சென்று இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கியிருந்தார். ஆனால் அதற்கு விஜய் மல்லையா எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

தற்போது கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையா அப்போது நிருபர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றபோது நான் கிரிக்கெட் பார்க்க தான் வந்துள்ளேன் என்று சொல்லிவிட்டு உடனே மைதானத்திற்குள் சென்றுவிட்டார்.

அப்போது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் விஜய் மல்லையா பார்த்தவுடன் திருடன் திருடன் என்று அவரை கேவலப்படுத்தியது உடன் இன்னும் சில அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அதனைக் கேட்ட விஜய் மல்லையா தேங்க்யூ எனக் கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top