லண்டன்: இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் மல்லையாவை ஸ்காட்லார்ந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய் மல்லையா. மதுபான தொழில் மற்றும் விமான சேவைகளில் விஜய் மல்லையா நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன.