விஜய் மல்லையா இவரை அறியாதவர்களை நாம் காண்பது மிக அரிது. அந்தளவுக்கு மனிதர் பிரசித்தி. இவர் யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்கள் ஆகும். இவருடைய பகட்டான விருந்துகள் மற்றும் இவரது உணவு விடுதிகள், தானியங்குகள், போர்முலா ஒன் டீம் போர்ஸ் இந்தியா, ஐபிஎல் கிரிக்கெட் குழுவான ராயல் சாலேன்ஜெர்ஸ் பெங்களூர், மற்றும் இவருடைய இயந்திர படகு, இந்தியன் எம்ப்ரேஸ் போன்றவை தான் இவரை உலக பாம்ஸ் ஆக்கியது.

வங்கிகளில் ரூ9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார் இவர். தற்பொழுது 62 வயதாகிறது இவருக்கு.

கடந்த 2011 இல் இருந்து விஜய்மல்லையாவும், பிங்கி லால்வாணியும் ‘ல்விங் டுகெதர்’ முறையில் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து பிங்கி லால்வாணியை முறைப்படி திருமணம் செய்ய விஜய் மல்லையா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிங்கி லால்வாணி மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்ட்ரஸாக இருந்தவர். சில மாதங்களுக்கு முன் விஜய் மல்லையாவை ஸ்காட்லார்ந்து யார்டு போலீஸ் கைது செய்த பொழுது கூட பிங்கி அவர் உடன் தான் இருந்தார்.

Vijay-Mallya-and-Pinky-Lalwani

இதற்கு முன் கடந்த 1986 ஆம் ஆண்டு சமீரா தியாப் என்ற ஏர் இந்திய விமான ஏர் ஹோஸ்ட்ரசை விஜய் மல்லையா முதலாவதாக திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்தபின், கடந்த 1993-ம் ஆண்டு ரேகா என்பவரை 2-வது திருமணம் செய்தார்.இவர்களுக்கு சித்தார்த், லீயானா, தன்யா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் விரைவில் இவரின் திருமண தேதி மற்றும் இடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here