Connect with us
Cinemapettai

Cinemapettai

கோலியை நம்பினோர்.. வைரலாகுது விராட், ஆர் சி பி பற்றிய விஜய் மல்லையாவின் ட்வீட்

Sports | விளையாட்டு

கோலியை நம்பினோர்.. வைரலாகுது விராட், ஆர் சி பி பற்றிய விஜய் மல்லையாவின் ட்வீட்

கிரிக்கெட் கொண்டாட்டமான ஐபில் போட்டிகள் துவங்கும் நாள் நெருங்கிக்கொண்டே செல்கிறது. நேற்று இரவு அட்டவணை வெளியானது. புதிய வீரர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன் என பல அதிரடி மாறுதல்களை டீம்கள் செய்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அடுத்து அதிக ரசிகர் வட்டம் உடைய டீம் என்றல் அது பெங்களுரு ராயல் சாலஞ்சர்ஸ் தான். எனினும் பலமானதாகவே இருப்பினும் இந்த் டீம் இது வரை கப் ஜெயித்தது இல்லை.

புதிய சீசன் துவங்கும் முன் பெங்களூர் அணி லோகோ, பெயரை  மாற்றி முழு நம்பிக்கையுடன் இந்த முறை களமிறங்குகிறது. சில தினங்களுக்கு முன் ஆர்.சி.பி அணியின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டது . புதிய லோகோவில் சிங்கம் இடம்பெற்றுள்ளது.  தைரியமாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு இந்த லோகோ மாற்றம் தேவை என நம்புகிறோம் என்றனர் நிர்வாக தரப்பு. மேலும் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஒப்பந்தமாகி உள்ளனர்.

இந்நிலையில் விஜய் மல்லையா பெங்களூர் அணியின் விராட் கோலி குறித்து ட்வீட் செய்திருக்கிறார். விராட் கோலி U-19 டீமில் இருந்து நேரடியாக பெங்களூர் அணிக்கு வந்தவர். தற்பொழுது வெற்றிகரமாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார், அவர் மிகச்சிறந்த வீரர். எனவே அவர்மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை அவரிடமே விட்டு விடுங்கள். நீண்டகாலமாக காத்திருக்கும் பெங்களூர் ரசிகர்கள் கோப்பை கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

RCB

இது போன்ற ஆதரவான பேச்சு விராட் மீது உள்ள அழுதத்த்தை குறைக்கும் என்பது மட்டும் உறுதி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top