Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மக்கள் மன்றத்தால் பொதுமக்களுக்கு இடையூறு…கடுப்பில் தளபதி
விஜய் மக்கள் மன்றத்தின் இடையூறுகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனையில் தளபதி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் 80களில் அதிக பிரபலமான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரின் மகன் விஜய். நடிப்பில் மீது அதிக ஆர்வம் இருந்தவருக்கு பெற்றோர்கள் முதலில் பெரிய நோ சொல்லினர். இருந்தும் ஒரே மகனின் பிடிவாதத்தால் தன் இயக்கத்திலேயே அவரை அறிமுகம் செய்து வைத்தார். முதலில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து மகனுக்காக 7 படங்கள் வரை எடுத்தார். அதனால், அவரும் இளம் நடிகராக அறியப்பட்டார்.
தந்தை தந்த ஏணியை சரியாக பயன்படுத்தி கொண்ட விஜய் கோலிவுட்டில் தனக்கென்ற சிம்மாசனத்தையே உருவாக்கினார். படம் வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் அதில் மட்டுமே நிலைக்காமல் கடந்து செல்லும் பழக்கம் இருப்பவர் தளபதி. அடிதடி சண்டை காட்சிகளை விட இளையதளபதியாக இருந்த போது அதிகம் காமெடி கதாபாத்திரங்களை கையில் எடுத்து வெற்றி பெற்றார். சமீபத்தில் வெளியான மெர்சல் படம் மூலம் தளபதியாக ப்ரோமோஷன் பெற்றார்.
ஜூலை 2009ல் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற அமைப்பாக விஜய் மாற்றி அறிவித்தார். இதற்கு ஒரு ஆண்டு முன்னரே தனது ரசிகர் மன்றங்களுக்கென தனியே ஒரு கொடியினை அறிமுகப்படுத்தியிருந்தார். விஜயின் தந்தை தமிழ்த் திரைப்பட இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவராக உள்ளார். சமூக பிரச்சனைகளில் ஆக்டிவ்வாக இருக்கும் இவ்வியக்கம் தற்போது ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் வெளியிட்ட ட்வீட் வைரலாக பரவி வருகிறது. அப்பதிவில், “உன்னால் முடியும் தம்பி” நடைபாதை உடைத்து என்னுடைய கொடியை நட்டு வைக்க உன்னால் முடியும் தம்பி. விஜய் ரசிகர்கள் ஏற்கனவே அரசியல் கட்சியாக செயல்பட தொடங்கி விட்டது. தாம்பரம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்த புகைப்படமும் வைரலாக பரவி இருக்கிறது. ரசிகர்களின் இந்த நடவடிக்கையால் தளபதியே அதிருப்தியில் இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது.
"உன்னால் முடியும் தம்பி" நடைபாதை உடைத்து என்னுடைய கொடியை நட்டு வைக்க உன்னால் முடியும் தம்பி. @actorvijay fans already started to behave like the traditional political parties.
Tambaram. pic.twitter.com/2OrsoGUGVw— Cancel the Tenders (@Arappor) June 27, 2018
