இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60′ படம் மற்றும் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமும் ரிலீசுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் 60’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் அதே தினத்தில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கார்த்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் ‘கொடி’, விஷாலின் ‘கத்திச்சண்டை’ ஆகிய திரைப்படங்கள் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் விஜய், மகேஷ்பாபு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்கும் அதே தினத்தில் வெளியாக இருப்பதால் இவ்வருட தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.