விஜய் மேஜிக் செய்த வேகத்தைப் பார்த்து, அவருக்கு சொல்லிக் கொடுத்த ஒரிஜினல் மேஜிக் கலைஞரே மெர்சலாகிவிட்டாராம். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’.mersal audio teaser 1

இந்தப் படத்தில், அப்பா – இரண்டு மகன்கள் என மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார் விஜய். அப்பா கேரக்டர் பண்ணையாராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் மேஜிக் கலைஞராகவும் நடித்துள்ளனர்.

மேஜிக் கலைஞர் கேரக்டருக்கு, மாசிடோனியாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் கோகோ என்பவர் மேஜிக் விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார்.

படத்தில் விஜய் காட்டும் மேஜிக் சாகசங்கள், உலக அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்துவதாக இருக்குமாம். அத்துடன், அவர் கற்றுக் கொடுத்தபோது விஜய் செய்த மேஜிக்கின் வேகத்தைப் பார்த்து, அவரே மெர்சலாகிவிட்டாராம்.